search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன் விரோதம்"

    • முன் விரோதம் காரணமாக தகராறு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த நம்மண்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று அரிஹரபாக்கத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சக்கரபாண்டி, சுரேஷ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். அப்போது முன் விரோதம் காரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த அசோகனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த சக்கரபாண்டி அருகே இருந்த பீர் பாட்டிலாலும், சுரேஷ் கல்லாலும் அசோகன் தலையில் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அருகே இருந்தவர்கள் அசோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அசோகன் மனைவி மைதிலி தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன்- தம்பிகளை தேடி வருகின்றனர்.

    • வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
    • போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அப்போது வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பத்மநாபன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.

    • 2 பேர் கைது
    • சொத்து தகராறில் விபரீதம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சின்ன பாலம் பாக்கம், கும்பங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (70), விவசாயி.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குமரவேல்(45), ரமேஷ்(41) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரமேஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    அண்ணன் தம்பி இடையே பரம்பரை சொத்தை பிரிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் குமரவேலின் மகன் அருண்குமார் (வயது 23), நேற்று நள்ளிரவு தனது நண்பர்களான குடியாத்தம் அடுத்த தட்டப்பாரையைச் சேர்ந்த விக்னேஷ்(18), ஹரி, கார்த்திக் ஆகியோருடன் ரமேஷ் வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ரமேஷை வெளியே அழைத்து வந்து இரும்புரா டால் சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனை கண்ட அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ரமேஷை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ரமேஷின் மனைவி ராஜகுமாரி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து அருண்குமார் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலை மறைவாக உள்ள ஹரி, கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணவேணி, சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது.
    • காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த புதுக்கடையை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 73). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சுரேஷ் உட்பட 4 பேர் திடீரென்று மூதாட்டி கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    பின்னர் பீர் பாட்டிலால் கிருஷ்ணவேணியை தாக்கி அவரது வீட்டில் இருந்த டி.வி. பெட்டியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் சுரேஷ், நர்மதா, கிருஷ்ணமூர்த்தி, உத்திராம்பாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம், கிழக்கு மேடு புது மாரியம்மன் கோவில் தெரு பகுதியைசேர்ந்த ஆணைகவுண்டர் (74). இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த பிரியா (25) என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன்தினம் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆணைகவுண்டர், பிரவின் குமார், மகேந்திரன், பிரியா ஆகிய 4 பேர் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 26 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர்
    • ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    கோட்டார் பட்டக சாலியன்விளை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29).

    இவரது வீட்டிற்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் சாந்தி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சிவசங்கர் உட்பட அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் அவரது நண்பர் விக்னேஷ் (29) இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரியவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிவசங்கர் இருவரையும் வழிமறித்தார். அப்போது ரஞ்சித்திடம் என் மீது எப்படி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த அவரது நண்பர் விக்னேசுக்கும் காயம் ஏற்பட்டது. ரஞ்சித், விக்னேஷின் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விக்னேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.

    இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது சில வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த தீபாவளி அன்று ஒன்றாக சேர்ந்து மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.
    • கவியரசன், அழகேசன் சேர்ந்து அரிவாளால் ஆர்யாவை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்யா (வயது 19). ராமாபுரத்தை சேர்ந்தவர் கவியரசன் (22).

    இவர்கள் இருவரும் கடந்த தீபாவளி அன்று ஒன்றாக சேர்ந்து மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் சமரசமாகி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த வீரமரசன்பேட்டை கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவை கவியரசன் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆர்யா தீபாவளி சம்பவத்தை நினைவு கூறினார்.

    இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சை அடுத்த வயலூர் பகுதிக்கு சென்று மது அருந்தினர்.

    அப்போது கவியரசன் தனது நண்பர் அழகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு வயலூருக்கு வருமாறு கூறினார். அதன்படி அவரும் வந்தார்.

    பின்னர் ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் கொண்டு கவியரசன், அழகேசன் சேர்ந்து அரிவாளால் ஆர்யாவை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் ஆர்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன், அழகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • முன் விரோதம் காரணமாக தகராறு
    • ெஜயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன்மேல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 46 ). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதி (60). லாரி டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த மதி அருகே இருந்த கம்பால் சத்தியமூர்த்தியின் தலை மீது தாக்கி உள்ளார்.

    இதில் சத்தியமூர்த்திக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அருகே இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியை கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

    • அன்பழகன் (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • தகராறில் ஈட்டுப்பட்டு அன்பழகன் அவரது மனைவி வண்ணக்கொடி ஆகியோரை காயப்படுத்தியுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரிய காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவதன்று ராஜேந்திரன் குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈட்டுப்பட்டு அன்பழகன் அவரது மனைவி வண்ணக்கொடி ஆகியோரை காயப்படுத்தியுள்ளனர்.

    காயமடைந்த வண்ண கொடி கொடுத்த புகாரின் பேரில் குமார், கந்தசாமி, சக்திவேல், மனிவாசன், ராஜா,அழகேசன், சுப்ர மணி, லட்சுமி, பாப்பாத்தி, ராஜேந்திரன், அலமேலு மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர் மீது தார மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்
    • தம்பதிக்கும் வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது


    திருச்சி:

    முசிறி அடுத்த கோடியம்பாளையம் கூத்தன் செட்டி தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி முருகாம்பாள் (வயது 35). இவர்கள் இருவரும் முசிறி பெரியார் பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது முத்தம்பட்டி அண்ணா நெசவாளர் காலனியை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் பாலமுருகன்( 30), மணிவேல் ஆகியோர் இவர்களை வழிமறித்து, முன் விரோதம்  காரணமாக கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இச்சம்பவம் குறித்து முசிறி காவல் நிலையத்தில் முருகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து, சிறைக்கு அனுப்பினர்.


    • வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
    • 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ஆடிக்கொண்டு சென்றார்கள். இதனை அதே பகுதியை சேர்ந்த மணிவர்மன் என்பவர் தட்டி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    இதனை தட்டிக் கேட்ட உறவினர் பன்னீர் செல்வியை அடித்தனர். மேலும் இதனை பார்த்த மணிவர்மன் அண்ணன் அன்பு நேசமணியினை இந்த கும்பல் சரமாரியாக தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த மணிவர்மன் மற்றும் பன்னீர்செல்வி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், திவாகர், மோகன், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீராம் என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோ ட்டை கீழையூர் முக்கரைத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55) எலக்ட்ரீசியன்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து கடைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கட்டுமானம் அருகே சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் ( 22) என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த ரவி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×